திங்கள், 22 ஜூன், 2009

நெடுந்தொடர்கள் - ஒரு பார்வை


எல்லா தொலைக்காட்சிகளிலும் (மக்கள் தொலைக்காட்சி தவிர்த்து ) ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் , நாள் முழுவதும் அலுவலகத்தில் மன ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் உழைத்துவிட்டு திரும்பும் ஆண்மகன் களின் மன உளைச்சலுக்கு மிக பெரிய காரணமாக உள்ளது...

டி .ஆர்.பீ ரேடிங் என்று ஒரு மோசடியான தரக்குரியீட்டை வைத்து கொண்டு தொலைக்காட்சிகள் செய்யும் இந்த சமூக சீர்கேட்டை யார்தான் கட்டுப்படுத்துவது... சினிமாவிர்க்காவ்து சென்சார் சான்றிதழ் உண்டு..

குடும்பப்பெண்கள் இப்போது எத்தகைய மோசமான நெடுந்தொடர்களையும் பார்க்க தயாராக இருக்கிறார்கள் . .

இதில் கொடுமை என்னவென்றால் நல்ல வாசகர்கள் ,nadunilamaiyaana திரை விமர்சனம் என்று பெயரெடுத்த ஒரு பத்திரிக்கை குழுமத்திடமிருந்து ஒரு மோசமான ,ஒரு நெடுந்தொடர் எப்படியெல்லாம் இருக்ககூடாதோ அப்படியெல்லாம் எடுத்து தொடர்ந்து ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது..இதில் இந்த பத்திரிக்கை புதிதாக வெளிவரும் படங்களுக்கு திரை விமர்சனம் என்ற பெயரில் மதிப்பெண் வேறு வழங்கிக்கொண்டு இருக்கிறது....

நெடுந்தொடர் ஏற்படுத்தும் சமூக சீர்கேடுகள்

---------------------------------------------------------

நெடுன்தொடர்களால் நமது குடும்ப பெண்கள் மிக பெரிய மன மாற்றத்தை சந்தித்து வருகிறார்கள்...அருகில் வசிக்கும் பெண்களுடன் பழகுவதை அடியோடு

நிருத்திகொன்டார்கள்..

மிக முக்கிய பிரச்னையாக தனது குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தையும்

குறைத்து விட்டார்கள் .இதனால் குழந்தை வளர்ப்பிலும் .குழந்தைகள் மன நிலையிலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது ..

ஒரு நண்பர் வீட்டிற்கு சென்ற நேரத்தில் அவர்களின் குழந்தை தன் அம்மாவிடம் எதோ சொல்ல முயல ஆனால் இருவரும் நெடுன்தொடரிலேயே மூழ்கி இருந்தனர் .அந்த குழந்தை தன் அம்மாவின் முகத்தை கையால் திருப்பி "என் முகத்தை பார்த்து பேசும்மா " என்று சொல்ல அதற்க்கு குழந்தையின் அம்மா "நாடகத்தில் முக்கியமான காட்சி வரும்போது ஏன் என் உயிரை வாங்குகிறாய் ?"

என்று அடித்துவிட்டார்கள்..எனக்கு மிகுந்த மன வேதனையை தந்த சம்பவம் இது.குடும்ப பெண்களுக்கு குழந்தை வளர்ப்பை விட இப்போது நெடுந்தொடர்களின் கதை முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது..

இந்த நெடுந்தொடர்கள் நமது சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை இனி வரும் காலம் தான் பதில் சொல்லும்..ஆனால் அந்த பதில் நல்ல பதிலாக இருக்காது என்பது நிச்சயம் ...

இராம .செங்குட்டுவன் .

____________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக