திங்கள், 12 அக்டோபர், 2009

நன்றி நவிலல்

(காதலிககு மட்டுமானது, மனைவிக்கு அல்ல )

என் அருமை காதலியே உனக்கும் உன் தந்தைக்கும் என் நன்றி !
ஒருவேளை நீ சமமதித்திருந்து

எதோ ஒரு கோயிலில்
நான்கு நண்பர்களுக்கு மத்தியில்
உன் கழுத்தில் நான் தாலி கட்டி இருந்தால் ,
அல்லது உன் தந்தை சம்மதித்திருந்து
எதோ ஒரு மன்டபத்தில்
ஊரைக்கூட்டி உன் கழுத்தில் நான் தாலி கட்டி இருந்தால்
அன்றோடு நம் காதலும் முடிந்து போயிருக்கும் ..
நல்லவேளை நீயும் சம்மதிக்காது உன் தந்தையும் சம்மதிக்காது

இன்று வரை நம் காதலை உயிர்போடு வைத்திருப்பதற்கு

என் அருமை காதலியே உனக்கும் உன் தந்தைக்கும் என் நன்றி !

திருட்டு திருமணத்திலோ அல்லது ஊர் அறிந்த திருமணத்திலோ முடிந்த காதல் .......

தாடி வைத்து திரிபவர்களிடமும் ,வேறொருத்திஉடன் திருமணபந்தத்தில் வாழ்ந்தாலும் மனதளவில் தன் காதலியின் நினைவுகளோடு வழ்பவர்களிடம்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறது....

வெற்றிபெற்றதாக சொல்லும் காதலர்களிடம் காதல் தோல்வி அடைந்து விடுகிறது......

தற்கொலை செய்து கொள்ளும் காதலர்களோடு காதலும் செத்துபோகிறது ........

என்னோடு
என் காதலை இன்று வரை உயிர்போடு
விட்டு வைத்திருப்பதற்காக

என் அருமை காதலியே உனக்கும் உன் தந்தைக்கும் என் நன்றி !
மனைவியோடு சண்டை நேரங்களில்
வரும் மன உளைச்சலுக்கு பதில்

என் மனதில் தோன்றும்

உன்னுடன் பழகிய இனிமையான நினைவுகளால் மகிழ்ச்சி தான் வருகிறது

அதனால் மனைவி உடன் சண்டையை எதிர்பார்த்து ஏங்க வைத்த என் அருமைக்காதலியே உனக்கும் உன் தந்தைக்கும் என் நன்றி !

கவிதை & ஓவியம்

இராம.செங்குட்டுவன்