செவ்வாய், 23 ஜூன், 2009

உணர்வுக்கு ஏது தடை ?

இருபது -இருபது
உலககோப்பை
இறுதிபோட்டி
எதிரி நாடே ஆனாலும்
இலங்கையை பாகிஸ்தான் வெல்ல
எல்லா தமிழ் உள்ளங்களும்
வேண்டிக்கொண்டதை
எது தடுக்கும்?
ஆஸ்த்ரேலியாவில் இந்தியர்கள்
அடிமேல் அடிவாங்க காரணம்
இந்தியர்கள் மீதான இனவெறியாம்.
அப்படியென்றால்
இலங்கையில் நடந்தது என்ன பங்காளி சண்டையா?

இன்றைய உணவே மருந்து

தினமும் காலை வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த பேரிசம்பழம் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள ரததட்டுக்களின் (Platelet) எண்ணிக்கை அதிகமாகும் .

திங்கள், 22 ஜூன், 2009

நெடுந்தொடர்கள் - ஒரு பார்வை


எல்லா தொலைக்காட்சிகளிலும் (மக்கள் தொலைக்காட்சி தவிர்த்து ) ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் , நாள் முழுவதும் அலுவலகத்தில் மன ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் உழைத்துவிட்டு திரும்பும் ஆண்மகன் களின் மன உளைச்சலுக்கு மிக பெரிய காரணமாக உள்ளது...

டி .ஆர்.பீ ரேடிங் என்று ஒரு மோசடியான தரக்குரியீட்டை வைத்து கொண்டு தொலைக்காட்சிகள் செய்யும் இந்த சமூக சீர்கேட்டை யார்தான் கட்டுப்படுத்துவது... சினிமாவிர்க்காவ்து சென்சார் சான்றிதழ் உண்டு..

குடும்பப்பெண்கள் இப்போது எத்தகைய மோசமான நெடுந்தொடர்களையும் பார்க்க தயாராக இருக்கிறார்கள் . .

இதில் கொடுமை என்னவென்றால் நல்ல வாசகர்கள் ,nadunilamaiyaana திரை விமர்சனம் என்று பெயரெடுத்த ஒரு பத்திரிக்கை குழுமத்திடமிருந்து ஒரு மோசமான ,ஒரு நெடுந்தொடர் எப்படியெல்லாம் இருக்ககூடாதோ அப்படியெல்லாம் எடுத்து தொடர்ந்து ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது..இதில் இந்த பத்திரிக்கை புதிதாக வெளிவரும் படங்களுக்கு திரை விமர்சனம் என்ற பெயரில் மதிப்பெண் வேறு வழங்கிக்கொண்டு இருக்கிறது....

நெடுந்தொடர் ஏற்படுத்தும் சமூக சீர்கேடுகள்

---------------------------------------------------------

நெடுன்தொடர்களால் நமது குடும்ப பெண்கள் மிக பெரிய மன மாற்றத்தை சந்தித்து வருகிறார்கள்...அருகில் வசிக்கும் பெண்களுடன் பழகுவதை அடியோடு

நிருத்திகொன்டார்கள்..

மிக முக்கிய பிரச்னையாக தனது குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தையும்

குறைத்து விட்டார்கள் .இதனால் குழந்தை வளர்ப்பிலும் .குழந்தைகள் மன நிலையிலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது ..

ஒரு நண்பர் வீட்டிற்கு சென்ற நேரத்தில் அவர்களின் குழந்தை தன் அம்மாவிடம் எதோ சொல்ல முயல ஆனால் இருவரும் நெடுன்தொடரிலேயே மூழ்கி இருந்தனர் .அந்த குழந்தை தன் அம்மாவின் முகத்தை கையால் திருப்பி "என் முகத்தை பார்த்து பேசும்மா " என்று சொல்ல அதற்க்கு குழந்தையின் அம்மா "நாடகத்தில் முக்கியமான காட்சி வரும்போது ஏன் என் உயிரை வாங்குகிறாய் ?"

என்று அடித்துவிட்டார்கள்..எனக்கு மிகுந்த மன வேதனையை தந்த சம்பவம் இது.குடும்ப பெண்களுக்கு குழந்தை வளர்ப்பை விட இப்போது நெடுந்தொடர்களின் கதை முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது..

இந்த நெடுந்தொடர்கள் நமது சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை இனி வரும் காலம் தான் பதில் சொல்லும்..ஆனால் அந்த பதில் நல்ல பதிலாக இருக்காது என்பது நிச்சயம் ...

இராம .செங்குட்டுவன் .

____________________

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்



சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறியாமல் யாரும் இருக்கமுடியாது. அவர் ஒரு வீரத்துறவியாவார். அவரது பொன்மொழிகள் அர்த்தம் மிகுந்தவை. அவற்றில் பொதுவாக அவர் கூறிய சில பொன்மொழிகளைப் பார்க்கலாம்.பொதுவான பொன்மொழிகள்:-* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.* அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.* கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.* காமம், பொன்னாசை இவைகளால் ஆளப்படும் அற்பர்கள் பொருட்படுத்தப்படக்கூடியவர்கள் அல்லர்.* எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.* அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.* அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.* எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.

செவ்வாய், 16 ஜூன், 2009

இன்றைய உணவே மருந்து

கொள்ளு

கொள்ளை பொன்னிறமாக வறுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாக மாவு போல அரைத்துகொள்ளவும்.தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டுகொண்டு வெதுவெதுப்பான சுடுநீர் குடிக்கவும்.இப்படி அறுபது நாட்கள் செய்து வர உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் ஆரோக்கியம் பெரும்.
-இராம .செங்குட்டுவன்

இன்று ஒரு செய்தி


கன்னியாகுமரியில் கடல் சீற்றம்.


இன்று ஒரு கிசு-கிசு


ஹீரோயின் விஷயத்தில் மூக்கை நுழைக்காத சில நடிகர்களில் தல-யும் ஒருவர். ஆனால் ஒருவரை மட்டும் ஹீரோயினாக போட வேண்டாம் என இயக்குனர்களிடம் அன்பாக கேட்டுக் கொண்டுள்ளார். பூம்பாவாய் ஆடிப்பாடிய அந்த ஆம்ப‌ல், கறுப்பு காமெடியின் புராண படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியது தல-க்குப் பிடிக்கவில்லை. காரணம் கறுப்பு காமெடிக்கும் தல-க்கும் ஆகாது. அவருடன் ஒரு பாடலுக்கு ஆடியவரை எப்படி நமது படத்தில் ஹீரோயினாக்குவது என்பதுதான் இந்த நிபந்தனைக்கு காரணமாம். ஈகோ இல்லாத தலை மண்ணில் ஏது?

இன்று ஒரு கவிதை


கூண்டுகிளிக்கு பிறந்த

குஞ்சு கிளிக்கு

எப்படி? ஏன்?

வந்தன சிறகுகள் ....
-கல்யாண்ஜி