புதன், 19 மே, 2010

முத்துக்குமார் ஒரு தீவிரவாதிதான்-குழலி

முத்துக்குமாருக்கு சிலை திறப்பாம்கொளுத்திக்கொண்டவனுக்கு எவ்வளவு திமிர்காதல் தோல்வியால் தற்கொலைவேலை கிடைக்காதவிரக்தியில் தற்கொலைசம்பளம் பத்தாமல் தற்கொலைசொல்லியிருப்போம் ஆயிரம் கதை
நாசமாப்போனவன்கடிதம் எழுதிக்கொடுத்து விட்டுகொளுத்திக்கொண்டான் திமிர் பிடித்தவன்கடிதம் எழுதிய பொறம்போக்குபாப்பாத்தியை பற்றி மட்டும்எழுதிவிட்டுப்போக வேண்டியது தானேஐம்பது ஆண்டுகாலம் கட்டியெழுப்பியதமிழ் இனத்தலைவனையும்காட்டிக்கொடுத்துவிட்டானே
உடலை கைப்பற்றிஉணர்ச்சியை ஊட்டிஊரெங்கும் தம் பிணம் சுமந்துபுரட்சி செய்ய சொன்னானேஇவன் தீவிரவாதி இல்லையா?இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?
உதயக்குமாரை உண்டு ஏப்பம்விட்டவர்களுக்குமுத்துக்குமாரை முழுங்கதெரியாதாடா முட்டாப்பயலே
கோர்ட்டு தீர்ப்புக்கும்கருத்துக்கணிப்புக்கும்அடுத்தவன் உயிரைஇழக்கவைக்கும் ஊரில்இனத்துக்காக தன் உயிரைஇழக்கிறானாம்இவன் தீவிரவாதி இல்லையா?இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?
டாஸ்மாக்கில் பாஸ்மார்க்குவாங்கிக்கொண்டிருக்கும்எம் இனத்திற்க்குமானாட மயிலாடவில்மயிங்கிக்கொண்டிருக்கும்எம் இனத்திற்க்குபிரியாணி குஞ்சுகள் போதும்எங்களுக்கு வேண்டாம்முத்துக்குமார் போன்ற தீவிரவாதிகள்.
-குழலி

செவ்வாய், 18 மே, 2010

மன்னித்துவிடுங்கள் என் உறவுகளே


ஆண்டொன்று ஓடிவிட்டது! பருவங்கள் மட்டுமே மாறின.
பதவி, பவிசு, பட்டம், விழா, கொண்டாட்டம், இலவசம், பொய், துரோகம், பணம், மறதி, பழிவாங்கலில் எதுவுமே மாறவில்லை.
மானுடம் மறந்ததற்கான ஆண்டுவிழா இன்று.
பச்சைத்துரோகத்தின் பரிசாய் புதையுண்ட பல லட்சம் உயிர்களை மறந்துபோகவும் தலைப்பட்டோம். யார் சரி யார் தவறுக்கு அப்பாற்பட்டு அப்பாவியாய் அத்தனை உயிர்கள் போனது நிஜம். பச்சிளம் குழந்தைகள், முதியோர் என மொத்தமாய் செத்தவர்க்கு ஓர் அஞ்சலி சொல்லக்கூட மனமில்லை நம்மவர்க்கு.
பத்திரிகைகள் மறக்காமல் சத்தீஷ்கர் நிகழ்வுக்கு யாரையோ நினைவு கூறுகின்றன.
ஒரு புறம் நினைத்தால் அவமானமாய் உணர்கிறேன். மறுபுறம் நான் மட்டுமே இப்படியிருக்கிறேன். என் உறவுகள் தமிழுக்காய் இன்னும் தலை நிமிர்ந்தேயிருக்கிறார்கள் என்ற பெருமிதம் சற்றே ஆறுதலாயிருக்கிறது.
நிர்க்கதியாய் நிற்பவனை ஆயுதம் ஏந்தி ஒரு கூட்டம் மிரட்டுகிறதென்றால் உண்மையில் ஆயுதம் இருப்பது யாரிடம்? பயந்தவன் தானே மிரட்டுவான். ஏதிலி யார்? வலையம் வலையம் என்று முதலைக் கண்ணீர் விட்டோம். அவர்கள் சுதந்திரமாய் இருக்கிறார்கள். அல்லது சுதந்திரமாய் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
சுதந்திரமாய் இருப்பதாய் மாயை கொண்டு கண்ணுக்குத் தெரியா இலவச, செய்தி இருட்டடிப்பு, போதையில் ஆழ்த்தும் தொலைக்காட்சிகள், மிரட்டல் என பல வலயங்களுக்குள் அகப்பட்டு உணராமல் இருக்கிறோமே! ஏதிலி யார்?
சென்ற வருடம் இருந்த பதட்டம், இயலாமை, எல்லாம் முடிந்த துக்கம் நெஞ்சை நிறைக்கிறது. நாகரீக உலகம் என்று மார்தட்டி நிற்கும் உலகலில், மறைந்தவனின் சமாதி கூட இடித்தொழிக்கப்படும் அவலம். க்ளோபல் வில்லேஜ் என்று பெருமை பொங்கும் உலகில் ஒரு மூதாட்டிக்கு அனுமதி மறுக்கும் மனிதநேயம்.
அதை வைத்து அரசியல் வியாபாரமாக்கும் அவலங்கள். இடது கையால் நீர் கொடுத்தமையால் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவனின் பெருமையை எழுதிக் காசாக்கி உதவிக்கரம் நீட்டும் பொய்முகம்.
அடிமையாய் இருக்கும் நமக்கு அவர்களுக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லை. அவர்களுக்கு அது தேவையும் இல்லை. தமிழ் மாறினாலும், தமிழர் புத்தாண்டு மாறினாலும், தலைஎழுத்தே மாறினாலும் எறியப்படும் எலும்புத்துண்டுக்கு அடிமையாகிவிட்டோம்.
எனக்கொரு வலைமனை இருக்கிறது. என்னால் இடுகையிட முடியும். இதற்கு மீறி ஏதும் செய்ய வழியற்ற, துணிச்சலற்ற ஒர் அடிமையாய் நானும் அதைத்தான் செய்கிறேன்.
மானத்துக்காய் உயிர்நீத்த அந்த தியாக உள்ளங்களுக்கு மானமற்ற ஒரு ஜீவனின் கண்ணீர் அஞ்சலி. மன்னித்துவிடுங்கள் என் uravugale..

ஞாயிறு, 16 மே, 2010

வெள்ளி, 14 மே, 2010

நாளை இதுவும் நடக்கலாம்











ரஞ்சிதா தி. மு. க வில் இணைந்தார்
தினமலர், தினத்தந்தி, தி ஹிந்து, தினகரன், கலைஞர் டிவி செய்திகளில் இந்த செய்தியை நாளை நீங்கள் கேட்கலாம் ..
நடிகை ரஞ்சிதா தமிழக முதல்வரும் தி. மு.க தலைவருமான திரு மு. கருணாநிதி அவர்கள் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தார்.அவரை வாழ்த்தி வரவேற்று பேசிய கருணாநிதி அவர்கள் நித்யானாந்தவுடன் கடவுள் இல்லை என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு பகுத்தறிவை தமிழ்நாட்டில் வளர செய்த முற்போக்கு சிந்தனை கொண்ட ரஞ்சிதாவிற்கு தி.மு.க தான் சிறந்த இடம் அவரை வாழ்த்தி வரவேற்கிறேன். என்று குறிப்பிட்டார். தி.மு.க வில் இணைந்த ரஞ்சிதாவை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். வேறு எந்த வேலையுமற்ற மந்திரிகள் துரைமுருகன், ஆர்க்காட்டார், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி ஆகியோர் சொல்லோழுவ உடன் இருந்தனர்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

பேரா. சுப. வீரபாண்டியன் அவர்களின் மன சாட்சிக்கு ஒரு கடிதம்.



அன்புள்ள சுபவீ வணக்கம். கடந்த காலத்தில் புலிகளுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் பேசி பல முறை சிறைசென்றவர் என்கிற வகையிலும் சமூக நீதிக்கான தமிழகப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர் என்ற வகையிலும் உங்கள் மீது மரியாதை உண்டு. இப்போதும் அந்த மரியாதை இருக்கும் உரிமையிலேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுத நேர்கிறது. வரவிருக்கும் மே மாதத்தில் 17,18,19 ஆகிய நாட்களை உங்களால் மறக்க முடியாது என நினைக்கிறேன். பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட சிறிய பிரேதசத்திற்குள் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்த நாட்கள். அந்நாட்களை இப்போது உங்களுக்கு நினைவுறுத்துவதால் நீங்கள் அசூயை அடையலாம். ஆனால் இன்னமும் அந்த மனிதப் பேரழிவில் இருந்து எங்களால் மீண்டு எழ முடியவில்லை என்ற வேதனையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
இப்போது பார்வதியம்மாள் தொடர்பாக கருணாநிதியின் முரசொலி இதழில் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் ஒரு பகுதி உண்மை. ஆனால் நீங்கள் பல நேரங்களில் பேசப்பட வேண்டிய உண்மைகளை பேசாமல் விட்டு விட்டு உங்களுக்குப் பாதகமில்லாத விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஈழ மக்கள் என்ற வகையில் நீங்கள் எங்களிடம் பேசியாக வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தே இக்கடிதம்.
அதிமுக தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து ஈழ மக்கள் மீது வன்மம் காட்டியவர் என்பதை யாரும் இங்கே மறுக்கவில்லை. ஈழ மக்களுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதி உரிமைகளுக்கும் ஜெயலலிதா எதிரானவர் என்பதை நாங்கள் கருணாநிதியிடமிருந்தோ அல்லது ஏனைய ஜெயலலிதா எதிர்ப்பாளர்களிடமிருந்தோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. பார்வதியம்மாள் சென்னை விமான நிலையம் வந்தபோது ரகசியமாக வரவேற்கப் போன நெடுமாறனையும், வைகோவையும் தள்ளி விட்டு விட்டு பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய சென்னை விமானநிலைய மத்திய அரசு ஊழியர்கள் (பாருங்கள் ஒரு செய்தியை எப்படி எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. மாநில அதிகாரிகளுக்கு தொடர்பில்லையாம்) விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் கட்சி இதழான முரசொலிக்கு நீங்கள் ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து அவர்கள் இன்று அதை வெளியிட்டிருகிறார்கள். கருணாநிதிக்காக நீங்கள் அடியாள் வேலை பார்ப்பது சரிதான். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் எழுதியதில் உறுத்தலாக சில விஷயங்கள் இருக்கிறது.
"இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 'உதவிட இயலுமா?' என்று கேட்டார். அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன்." எவ்வளவு ஆழமான வரிகள் சுபவீ... அதாவது சித்த நேரம் முன்னாடி பேசியிருந்தேன்னா அவா கிட்டே சொல்லியிருப்பேனே என்பது போல இருக்கிறது. ஏன் இரண்டு மணி நேரம் முன்னாடி சொல்லியிருந்தால் மட்டும் உங்கள் தலைவர் கருணாநிதி பார்வதியம்மாளை அனுமதித்திருப்பாரா என்ன?
சரி கருணாநிதிக்கும் எண்பது வயதாகி விட்டது அயர்ந்து தூங்கியிருப்பார். ஏன் மறு நாளே 'இப்படியாகி விட்டது நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை திருப்பி அனுப்பி விட்டார்கள். நாம் உடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி 2003-ல் ஜெயலலிதா போட்ட உத்தரவை நீக்கச் சொல்லுவோம். அம்மாவை நாமே அழைப்பதன் மூலம் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கலாம். முடிந்தால் தேர்தல் வரை நீடிக்கலாம்' என்று கலைஞரிடம் சொல்லியிருக்கலாமே? நீங்கள் சொன்னால் செய்யாமலா போய் விடுவார்? நீங்கள் சொல்லி அவர் எவ்வளவு செய்திருக்கிறார், இல்லையா சுப.வீ.?
இப்படியான உதவிகள் இதற்கு முன்னரும் மே மாதத்திலும் உங்களிடம் கேட்கப்பட்டிருக்கலாம். என்ன செய்வது கையாலாகாத ஓர் இனமாக ஈழத் தமிழினம் இன்று போய் விட்டது. அப்படி சில கோரிக்கைகள் உங்களிடம் கேட்கப்பட்டு நீங்கள் கருணாநிதியைச் சென்று பார்த்திருக்கலாம். அது பற்றி கருணாநிதி உங்களிடம் சொன்ன பதில் பற்றியும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். கடந்த மே மாதத்தில் போரின் முடிவின் போது போர் நிறுத்தம் கோரி நீங்களும், இருட்தந்தை ஜெகத்கஸ்பர் ராஜும் சேர்ந்து கனிமொழி மூலமாக இறுதிக் கட்ட வேலையில் ஈடுபட்டீர்கள். அந்த முயற்சியில்தான் புலிகளின் தலைவர்கள் நடேசனும், புலித்தேவன் உள்ளிட்ட பல நூறு போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்று ஜெகத்கஸ்பரே எழுதினார். உண்மையில் இது வேறு யாரும் சொன்ன குற்றச்சாட்டு இல்லை, ஜெகத்தே எழுதியதுதான். அதை வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை ஜெகத் பதில் சொல்லவில்லை. நீங்களாவது டில்லியில் இருந்து உங்களின் மூலம் உத்தரவிட்ட அந்த காங்கிரஸ் பெரியவர் யார் என்று சொல்வீர்களா?
நீங்கள் முரசொலியில் எழுதியிருக்கும் கட்டுரையில் ஜெயலலிதா ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் மீது பல கேள்விகளை வீசியிருக்கிறீர்கள். அது உண்மைதான் ஆனால் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழத்தில் போரை நிறுத்தி விட்டார்கள் என்று எழுந்து போன கருணாநிதியின் நிழலில் நின்று கொண்டு போயஸ் கார்டன் வாசலில் நிற்பவர்கள் மீது இக்குற்றச்சாட்டை வீச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? போயஸ்கார்டனை விட அறிவாலயம் மேல் என்கிற வீரவசனங்கள் இனி வேண்டாம். நாற்பதாண்டுகாலமாக நாங்கள் ஏமாந்து விட்டோம். இனியும் வீர வசன நடை வேண்டாம்.
பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்ட விவகாரத்தில் தொடர்பே இல்லாத கருணாநிதி மீது வைகோ குற்றம் சுமத்துவதாக பொங்குகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்துகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து வைகோ வருகிற தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம், கருணாநிதி முன்னிலையில் சட்டமன்றத்தில் சொன்னது போல செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பார்வதியம்மளை சிறப்புப் பேச்சாளராகக் கொண்டு வைகோ தமிழின எழுச்சி மாநாட்டு நடத்த திட்டமிட்டிருக்கலாம். அது உங்களுக்கும் கருணாநிதிக்கும் உங்களின் நண்பர்களான காங்கிரஸ்காரர்களுக்குமே தெரிந்த உளவுத் தகவல்; அது எமக்குத் தெரியாது.
ஆனால் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவாகரத்தில் கருணாநிதிக்கு தொடர்பே கிடையாதா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சுபவீ. தொடர்பே இல்லை என்றால் புறநகர் கமிஷ்னர் ஜாங்கிட் தலைமையில் ஏன் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது? இரவோடு இரவாக நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை அதிகாரிகள் விடவில்லை. இவர்கள் போகவில்லை என்றால் விட்டிருப்பார்கள் என்று போலீசே செய்தி பரப்பியதே இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில்?
நன்னடத்தை விதிகளின் படி தன்னை விடுவிக்கக் கோரினார் நளினி..... ஆமாம் நீண்டகால சிறை வதைகளில் இருந்து மீண்டும் தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார் நளினி. இதோ நளினியின் அறையில் இருந்து செல்போனைக் கண்டுபிடித்து விட்டார்கள் காவல்துறையினர். மேலதிகமாக மூன்று வழக்குகள் நளினி மீது போடப்பட்டுள்ளன.
நளினி போனை கழிப்பறையில் வீசியதாக சட்டமன்றத்தில் சொல்கிறார் திமுக‌ தலைவர்களில் ஒருவரும் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியவருமான துரைமுருகன். உடனே காங்கிரஸ்காரன் எழுந்து நளினி யாரிடமெல்லாம் பேசினார் என்று பட்டியல் சொல்கிறான். ஆமாம் நளின்யின் சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதும் கருணாநிதிக்குத் தெரியாது. இதையும் நம்புகிறோம். நள்ளிரவு 12 மணிக்குத் தகவல் தெரிந்து விமான நிலையத்தில் விசாரித்தபோது அவரை திருப்பி அனுப்பி விட்டதாக சொன்னார்கள் என்று முதலில் சொல்லி விட்டு, பின்னர் காலையில் பேப்பரைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கருணாநிதி சொன்னதையும் நம்புகிறோம். அந்த உத்தமருக்கு எதுவுமே தெரியாது; உங்களுக்கு நெடுமாறனும், வைகோவும் பார்வதியம்மாளை வைத்து என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியும் என்பதையும் நம்புகிறோம்.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல உள்ளூர்த் தமிழர்களில் பலரும் கூட பல நேரங்களில் மான ரோஷம் பார்க்காமல் உங்களிடம் உதவி கேட்டு இப்படி வகையாக சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில்தான் நீங்கள் வகையாக அந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். "இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவு வந்ததா?" என்று. சபாஷ் சரியான கேள்வி. உங்கள் அரசியல் ஆசானிடம் இருந்து ஆரம்பப்பாடத்தை நீங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கிறீர்கள். இந்த சொரணை கெட்ட ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இன்னும் உங்களிடம் ஏதாவது உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் வகையாக‌ இப்படி நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேளுங்கள். அப்போதாவது இவன்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.
சந்திப்போம் நீங்களும் செம்மொழி மாநாடு, கலைஞர் டிவி, திமுக குடும்ப விழாக்கள், பட்டிமன்றம், கருணாநிதியை ஈழ விவகாரத்தில் பாதுகாப்பது என்று பிஸியாக இருப்பீர்கள். உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.
இப்படிக்கு,
கையாலாகாத ஒரு தமிழன்
வெல்க‌ தமிழ்! வீழ்க தமிழன்!Read more: பகலவன்: பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம் http://pagalavantamil.blogspot.com/2010/04/blog-post_24.html#ixzz0mHDwfl4e

வெள்ளி, 5 மார்ச், 2010

சமத்துவம் ?!?

பெரியார் சமத்துவபுர
வீடு ஒதிக்கீடு விபரம் .
கோவிந்தசாமி முதலியார்
குப்புசாமி கவுண்டர்
உசேன் பாய்
ஆரோக்கியமேரி
வரதராஜ இயர்

வியாழன், 11 பிப்ரவரி, 2010

புதுவை அரசின் சிறந்த மாற்று திட்டம்



புதுவையில் கடந்த குடியரசு தினம் முதல் மாணவ- மாணவியர்கள் மட்டும் ஒரு ரூபாய் கட்டணத்தில் புதுவை முழவதும் பயணிக்க கூடிய தனிப்பட்ட பேருந்து வசதியினை புதுவை அரசு துவங்கியுள்ளது..இந்த திட்டம் உண்மையிலேயே வரவேற்க்ககூடிய ஒரு முன்னோடி மாற்று திட்டம் ஆகும்.. புத்தகமூட்டையைசுமந்து கொண்டு
மாணவர்கள் பொது பேருந்தில் பயணம் செய்வது அதிலும் கிராம புற மாணவர்கள் படும் அவதி சொல்லி மாளாது ..குழந்தைகளை படிக்க வைக்க வேண்டி கிராம புற மக்கள் நகரத்திற்கு இடம் பெயர்வதை இந்த நல்ல மாற்று திட்டம் தடுக்கும்..குழந்தைகளும் சிரமம் இன்றி பள்ளிக்கூடம் சென்று வரவும் படிப்பில் கவனம் செலுத்தவும் இந்த திட்டம் உதவும்...புதுவை ஒரு சிறிய மாநிலமாக இருப்பதால் இதை போன்ற மாற்று திட்டங்களை சோதனை முறையில் அமுல்படுத்தி அது மக்களிடையே வெற்றிபெற்றால் தொடர்ந்து செயல்படுத்தலாம். இதைபோல பிளாஸ்டிக் ஒழிப்பு , புதுவை நகரை தூய்மையாக வைத்திருக்க கடுமையான சட்டங்கள் ஆகியவற்றிலும் மாற்று திட்டங்களை கொண்டு வர முயற்சி எடுக்கவும், இந்த திட்டத்தை கொண்டு வந்தர்காகவும் புதுவை முதல்வருக்கு வாழ்த்துக்கள்..பேருந்து முதலாளிகளின் வலையில் விழுந்து விடாமல் தொடர்ந்து இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என புதுவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..

திங்கள், 8 பிப்ரவரி, 2010

பொங்கல் காசு-குறுங்கவிதை

கொடுத்ததெல்லாம்
திரும்ப பெறபட்டபோதும்
மீதம் இருந்தது
எல்லோராலும் எல்லோருக்கும்
வழங்கப்பட்ட
ஆசிர்வாதங்கள்..

சனி, 6 பிப்ரவரி, 2010

அஜித்தின் அசலான பேச்சு



மிக சமீபத்தில் நடந்த ஒருபாராட்டு விழாவில் நடிகர் அஜித் இப்படி பேசி இருக்கிறார் ."நடிகர்கள் நடிப்பு தொழிலை பார்க்கிறார்கள், அரசியல்வாதிகள் மக்கள் பணியை பார்கிறார்கள், இப்படி இருக்கும்போது எப்படி எங்களை போராட்டங்களில் கலந்துகொள்ளும்படியும், பாராட்டு விழாக்களில் கலந்துகொள்ளும்படியும் கட்டயாபடுத்தலாம் "என்று.

நடிகர் சங்கங்களும் , சினிமா தொழிலாளார்கள் சங்கங்களும் அதன் தலைவர்களும் தங்கள் காரியம் நடக்க வேண்டும் என்பதற்காகவும், காகா பிடிபதறகாகவும் மாதத்திற்கு ஒரு முறை பாராட்டு விழா என்று நடத்தி கொண்டு இருப்பார்கள் அதற்கெல்லாம் நடிகர்கள் கண்டிப்பாக வர வேண்டும் எழுதாத சட்டமாக இந்த காகா சங்கங்கள் நடிகர்களை கட்டயாபடுதுவது எதற்க்காக?மக்கள் பணிஆயிரம் இருக்க அதையெல்லாம் விட்டு விட்டு எல்லா அமைச்சர்களும் ஒரே இடத்தில அமர்ந்து கொண்டு நாட்டில் என்ன நடிக்கிறது என்று தெரியாமல் நான்கு ஐந்து மணி நேரம் நடிகைகளின் கவர்ச்சி நடனத்தை ஜொள்ளு விட்டு பார்த்து கொண்டு இருக்கும் இந்த கேடு கேட்ட ஜென்மங்களை என்னவென்று சொல்லுவது..பொதுவாக நடிகர்களுக்கு எல்லா கட்சியுளும் ரசிகர்கள் இருப்பார்கள் ..இதை போன்ற பாராட்டு விழாக்களில் கலந்து கொள்ளும்போது நடிகர்கள் ஒரு தரப்பு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கிறது ...பாராட்டு விழாவில் நடிகர்களின் புகழ்ச்சியினால் பாராட்டினால் என்ன நடந்து விடபோகிறது ?..இதனால் சாதாரண மக்களுக்கு என்ன நல்லது நடக்கபோகிறது ?வழுக்கை தலைக்கு மூன்று மணி நேரத்தில் சிகிச்சை என்று ஒரு விளம்பரம் பார்த்தேன் ... அனால் என்ன சிகிச்சை செய்தாலும் திருத்த முடியாத வழுக்கைகளை என்ன செய்வது ...

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சிறந்த மாற்று குறும்படம் விருது 2009
கர்ண மோட்சம்






சிறந்த மாற்று சிந்தனையாளன் சிறப்பு விருது 2009
சுகந்தி ஆசிரியை .



சிறந்த மாற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி விருது -2009
சின்ன சின்ன ஆசை - மக்கள் தொலைக்காட்சி

சிறந்த மாற்று தொலைகாட்சி தொகுப்பாளினி விருது 2009
மக்கள் தொலைகாட்சி ஆர்த்தி


சிறந்த மாற்று அரசியல்வாதி விருது 2009
தமிழருவி மணியன்
சிறந்த மாற்று ஊடகம் விருது 2009
மக்கள் தொலைக்காட்சி



சிறந்த மாற்று சிந்தனையாளன் விருது 2009
விஜய் டிவி நீயா நானா புகழ் கோபிநாத்


வியாழன், 21 ஜனவரி, 2010


இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!
14.01.2010
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை.எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்ச.தமிழ்மாறன்செய்தி தொடர்பாளர்தமிழீழ விடுதலைப்புலிகள்தமிழீழம் .

புதன், 13 ஜனவரி, 2010


தமிழர்திருநாள் & பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

இராம.செங்குட்டுவன்..

சனி, 9 ஜனவரி, 2010

மனிதாபிமானமற்ற மிருகங்கள்

திருநெல்வேலி ஆழ்வார்குறிச்சி நகருக்கு வந்த தமிழகத்தின் இரண்டு அமைச்சர்களுக்கு பந்தோபஸ்துக்கு சென்ற காவல்துறை துணை ஆய்வாளார் கொடூரமாக வெட்டி கொள்ளப்பட்ட காட்சியை தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.... எதோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண வந்தவர்களைப்போல இரண்டு அமைச்சர்களும் வேட்டியை மடக்கி கட்டி கொண்டுதுணை ஆய்வாளார் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை பார்த்த விதம் கேவலத்திலும் கேவலம் ... ஒரு மாநிலத்திற்கே சுகாதார துறைக்கு அமைச்சராக இருந்து கொண்டு ஒரு அரசு ஊழியரையே காப்பாற்றாத இவர் சாதாரண மக்களை எங்கே காப்பாற்ற போகிறார் ...எந்த நூதிஎட்டு இருந்து என்ன பிரயோசனம்...இதில் உச்ச கட்ட கேவலம் என்ன வென்றால் தேனியில் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் பகல் நேரத்தில் பொது மக்களுக்கு எந்த முன்னரவிப்பும் இல்லாமல் காவல்துறை குன்டுவெடிப்பதை போலயும்உடனே மக்களை காப்பாற்ற படுவதை போலயும் தீயணைப்பு துறை மற்றும்காவல் துறை இணைந்து பயிற்சி நடத்தி இருக்கிறார்கள்...மக்கள் உண்மையிலேயே குண்டு வெடிப்பு நிகழ்ந்துவிட்டதென அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள் ...அட ஆபீசருங்களா... உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா?....உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஒரு போலீஸ் அதிகாரியையே காப்பாற்ற முடியாத உங்களால் எப்படி மக்களை காப்பாற்ற முடியும் ?...

வெள்ளி, 1 ஜனவரி, 2010

தமிழர் திருநாள் & தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இராம.செங்குட்டுவன்
புதுவை