வெள்ளி, 24 ஜூலை, 2009

இலங்கைக்கு உதவ வேண்டாம் - எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சீமான் எச்சரிக்கை


சிங்களர்களை வளப்படுத்துவதற்காக தமிழக நிலங்களை மேம்படுத்த எம்.எஸ்.சுவாமிநாதனைப் பயன்படுத்த இலங்க முயல்கிறது. எனவே எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. மீறி அவர் சென்றால் சென்னையில் உள்ள சுவாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று இயக்குநர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது: இலங்கை அரசு வடக்கில் வசந்தம் என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் அவர்களது பூர்வீக பகுதியில் குடியமர்த்தப் போவதாக கூறி உள்ளது. ஆனால் இதுவரை தமிழர்கள் யாரும் குடியமர்த்தப்படவில்லை. சிங்கள ராணுவ, போலீசார் குடும்பத்தினரும் நிர்வாகத்தில் உள்ள சிங்களர்கள்தான் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதற்காக இந்தியா வழங்கிய ரூ.500 கோடியையும் தமிழக அரசு கொடுத்த ரூ.100 கோடியையும் சிங்கள அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே இந்திய, தமிழக அரசுகள் இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க வேண்டும். இலங்கை வடக்கில் தமிழர் பகுதிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் சிங்களர்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்கள் வசித்த இடத்தில் வீடு கட்டி கொடுக்காமல் சிங்கள அரசு சொல்லும் இடங்களில் வசிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.19 பேர் கொண்ட இலங்கை குழுவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் 2 தம்பிகள், 8 ராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் சிங்களர்கள். ஒரு தமிழர் கூட இல்லை. இந்த குழுவா தமிழர்களுக்கு வசந்தமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது? இதை இந்திய அரசும், தமிழக அரசும், சர்வதேச சமூகமும் தட்டிக்கேட்க வேண்டும். கடந்த ஜூன் மாதம் வரை அடுத்த நாட்டு விவகாரத்தில் எப்படி தலையிடுவது என்று கேள்வி எழுப்பிய மத்திய அரசு ரூ.500 கோடி கொடுத்தது வேடிக்கையானது. இந்த தொகையை வைத்துதான் கண்ணி வெடிகளை அகற்ற சிங்கள அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நெற்களஞ்சியமான கிளிநொச்சி, மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விளை நிலங்களை சிங்களர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள விவசாய நிலங்களில் விவசாய புரட்சி ஏற்படுத்துவதாக கூறி தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை சென்று ராஜபக்சேயை சந்தித்து பேசி உள்ளார். முழுமையான விவசாய திட்டங்களை செயல்படுத்த மீண்டும் எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லப் போவதாக அறிந்தோம். இதனால் சிங்களர்கள்தான் பயன் அடைவார்களே தவிர தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவது இல்லை. தமிழர்கள் அனைவரும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி விவசாயம் செய்வார்கள்? இது சிங்களர்களை வளப்படுத்தும் முயற்சி. எனவே எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. விவசாயப் புரட்சிக்கான திட்டங்களையும் அவர் வழங்கக்கூடாது. இதை மீறி அவர் இலங்கை சென்றால் தமிழ் உணர்வுள்ள மக்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள எம்.எஸ்.சாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். எம்.எஸ்.சாமிநாதன் தமிழர்கள் உணர்வை மதிப்பார் என்று நம்புகிறோம் என்றார் சீமான்.

புதன், 22 ஜூலை, 2009

அப்துல் கலாம் எனும் ஒரு தமிழருக்கு நேர்ந்த அவமானம்..


மும்பை விமான நிலையத்தில் காண்டினெண்டல் ஏர்வேய்ஸ் என்ற விமான நிறுவனம் பாதுகாப்பு சோதனை என்ற பெயரால் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர்அப்துல் கலாம் அவர்களை அவமானப்படுத்தி உள்ளது.... காங்கிரெஸ்

ஆட்சியில் ஒரு சாதரண தமிழனுக்கு நடந்த அவலங்கள் போய் இப்போது ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற மரியாதையை கூட தர வேண்டாம் ...குறைந்த பட்சம் நமது நாட்டு பாதுகாப்பிற்கு ஏவுகணைகளை தயாரித்து கொடுத்த ஒரு மூத்த விஞ்ஞானி என்ற முறையிலாவது அவருக்கு இந்த அவமானம் அதுவும் நமது நாட்டிலே நடந்திருக்ககூடாது .....இதற்கு ஒட்டு மொத்ததமிழர்களும் தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்....

வெள்ளி, 17 ஜூலை, 2009

முரண்பாடுகள்


ஆலமரத்து விழுதில் ஆடிய ஆகாய ஊஞ்சல் .....

அறுபதடி கினற்றில் மேலிருந்து அடித்த அந்தர் பல்டி....

ஆளுயர சணப்பை வயலில் நாள் முழுக்க கண்ணாமூச்சி...

தெருகூத்து பார்க்க போட்ட முதல் வரிசை சண்டை ....

விடிய விடிய சாமி ஊர்வலத்தில் யார் வீட்டு திண்ணையிலோ தூக்கம் ....

கூத்தில் கோமாளிக்கு போட்ட தவக்களை மாலை...

கனவில் வந்து மிரட்டிய தெருகூத்து சூரன்...

தினமும் சிகெரெட்வாங்கி வர அப்பா கொடுத்த காசின் மீதியில் வாங்கி சாப்பிட்ட கமர்கட் ,தேன் முட்டாய்...

காசு முட்டாய் வாங்கி சப்பியத்தில்
தெரிந்த பத்து காசின் மகிழ்ச்சி...

ஓணானை பிடித்து உயிருடன் புதைத்து
மறுநாள் தோண்டி கிடைக்காத காசின் ஏமாற்றம்... .

மணிக்கு ஐந்து ரூபாய் கொடுத்து கற்று கொள்ள
வாடகைக்கு எடுத்து வந்த குட்டி மிதிவண்டி ....


மிதிவண்டி கற்றுகொள்ளும்போது இடுப்பை வளைத்ததில்
அண்ணனிடம் முதுகில் வாங்கிய குத்து..


எல்லார் வீட்டிலிருந்தும் ஒரு பொருளை கொண்டு
செய்து சாப்பிட்ட கூட்டாஞ்சோறு ....

பனை ஏறி நுங்கு பெரிக்கையில் மரத்துக்காரன் சத்தம் கேட்டு
குதித்து ஓடியவனை காலிடறி விட்டு ஓடிய நண்பன் ......

மரமேறி மாங்காய் பெரிக்கையில்
கால்சட்டையை சொரட்டு கோலால் மாட்டி இழுத்த தோப்புக்காரன் .....

களத்துமேட்டில் அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்து திரும்புகையில் மிதிவண்டியோடு தூக்கி அடித்த சூறைக்காற்று....

மாட்டு பொங்கலன்று பலூனை ஊதி சைக்கிள் மர்கார்ட் கம்பியில் சுறுட்டி கட்டி

டர்ர்ர் சத்தத்துடன் சுற்றிவந்த ஊர்வலம்...


யாரோ தூக்கு போட்டு தொங்கிய ஆலமரத்தை கடக்கும்போது உரக்க பாடிய பக்தி பாட்டையும் மீறி வரும் பயம்...

வைகுண்ட ஏகாதசி அன்று அத்தையுடன் டூரிங் டாக்கிசில்

விடிய விடிய பார்த்த ஒரே டிக்கெட்டில் நான்கு பக்தி படங்கள் ....

அடிக்கடி நான் அடம்பிடித்து பாட்டி செய்து கொடுக்கும்

கேழ்வரகு இனிப்பு அடை ...

அம்மா இடித்தபின் உரலில்

ஒட்டிஇருந்த சூடான இட்லி கொண்டு தொட்டு சாப்பிட்ட மிளகாய் பொடியின் சுவை ...

பள்ளிக்கூடம் போகாமல் போக்கு காட்டியவனை

துரத்தி துரத்தி அப்பா கொடுத்த துடுப்பு அடி....

திருக்குறள் சொல்லாதவனை ரத்தம் வர காதை திருகிய வாத்தியாரை
மறுநாள் உண்டிகல்லால் அடித்து ரத்தம் வரவைத்து
அன்றோடு பள்ளிக்கூடத்தை மறந்த என் நண்பன்....

எப்படி கன்டிப்பேன்? என் பால பருவத்தில்
பந்தம், பாசம், நட்பு,சொந்தம்,பகை, பக்தி, விளையாட்டு
என்று எல்லாமும் அனுபவித்துவிட்டு இடம்பெயர்ந்த
என் நகரத்து ஒன்டிகுடித்தன வாழ்கையால்
பால பருவத்தை எட்டுக்கு எட்டு சுவற்றுக்குள்
எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு பள்ளிக்கூடம் போக மறுக்கும்
என் மகனை ?

இராம.செங்குட்டுவன்

திங்கள், 13 ஜூலை, 2009

புதன், 8 ஜூலை, 2009

மின்னஞ்சலில் உலவும் சுனாமி வதந்தி




என் மின்னஞ்சல் முகவரிக்கு சமிபத்தில் வந்த ஒரு மின்னஞ்சலில் வரும் ஜூலை 22 ஆம் தேதி அன்று சுனாமி வரபோவதாகவும் ,அதற்கு ஆதாரமாக
சூரிய கிரகணத்தை காரணம் காட்டி ஒரு அறிவியல் பூர்வ விளக்கமொன்றையும்
அனுப்பி உள்ளனர்...மேலும் ஜூலை மாதம் முழுவதும் கடற்கரை பகுதியிலிருந்து தள்ளியே இருக்கும்படியும் , தங்கள் நண்பர்களுக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பி வைக்கும்படியும் அறிவுரை கூறிஉள்ளது ....
இயற்கை என்றுமே மனித அறிவுக்கு எட்டிய பேரழிவை மனித குலம் தோன்றிய நாள் முதல் நிகழ்த்தியதில்லை என்பதை இந்த அறிவு ஜீவிகள் எப்போதுதான் உணருவார்களோ தெரியவில்லை...
கிழே எனக்கு வந்த மின்னஞ்சலின் சுருக்கம் ....

Quake and Tsunami Predicted on July 22 2009
Hello there. I just wanted to let you know that please stay away from the beaches all around in the month of July. There is a prediction that there will be another tsunami or earthquake hitting on 22 July 2009. It is also when there will be sun eclipse. Predicted that it is going to be really bad and countries like Malaysia (Sabah & Sarawak), Singapore, Maldives, Australia, Mauritius, Sri Lanka, India, Indonesia, Philippines are going to be badly hit. Please try and stay away from the beaches in July. Better to be safe than sorry. Please pass the word around. Please also pray for all beings.
Quake and Tsunami Predicted 22 July 2009
The eclipse quake theory is as follows, When the gravitational force of the sun and moon are both pulling on a plate that has not had series of recent earth quakes, the extra pull is all that is needed to "pop the seam" and cause a major quake.
Japans tectonic plates 6+ Magnitude Quake on 22 July 2009 at 3:00 pm Local Japanese time. This will be follower by two level 5+ Earthquakes and a Tsunami between 5:00 pm and 7:00 pm. The tsunami will start out in the pacific ocean (to the South East of Japan ... Along the fault line) and hit all the islands to the south west of Japan, Indonesia and even reach New Zealand. The major quakes will actually be along the fault lines in the Ocean. The theory that the gravitational pull of the Sun and Moon pulling together will do the following things. 1. Lift the tectonic plates
2. Cause the tide to rise more than usual 3. Cause an underground molten magma tide to dip and raise the plates following the water tide. Taken all the time data from the Nasa eclipse site into an excel spread sheet four the four tectonic plates in the region. Assumed an hour delay for each event following the lunar eclipse, and then summed the values. I assumed that the events would last longer for the fluids, water and molten magma than for dry land. And then summed the values four all 4 plates where Japan sits.

செவ்வாய், 7 ஜூலை, 2009

இதுவும் கேயாஸ் தியரி தான் .....

பாதிக்கு பாதி தண்ணி கலந்து
பால் வித்த காச கொண்டு
பழம் வாங்கலாம்னு பால்காரன்
பழகடைக்கு போனானாம் ..
மெழுகால மெருகேத்தி
பவுடரால பழுக்கவச்ச பழத்த
பால்காரனுக்கு வித்த பழகடைக்காரன்
மளிகை சாமான் வாங்கலாம்னு
மளிகை கடைக்கு போனானாம் .....
கடுகிலேர்ந்து பருப்பு வரைக்கும்
கலப்படம் பண்ண மளிகை சாமான
பழகடக்காரனுக்கு வித்த மளிகை கடக்காரன்
சாப்பிடலாம்னு ஓட்டலுக்கு போனானாம் ..
மாட்டு கறிய கோழி கறின்னு சொல்லி
மளிகை கடைக்காரனுக்கு வித்த ஓட்டல்காரன்
ஒடம்பு சரிஇல்லேன்னு
மருத்துவரு கிட்டே போனானாம் ...
ஒன்னு இல்லாத ஓட்டல் காரன் ஒடம்புக்கு
எல்லாம் சோதனையும் எழுதி கொடுத்து
ஏமாத்தி வைத்தியம் பார்த்த மருத்துவரு
சாமி கும்பிடனம்னு கோயிலுக்கு போனானாம்...
வரிசையில நிக்கற ஜனங்கள ஒதுக்கி
நேரா கருவறைக்கே கூட்டி சென்று
மருத்துவரு கழுத்துல மாலய போட்டு
தட்டு நிறைய காச பார்த்த ஐயரு
தயிரு வாங்கனும்னு
பால்காரன்கிட்டே போனானாம் ..
பாதிக்கு பாதி தண்ணி கலந்த பால் வித்த........
இருங்க ஆரம்பிச்ச இடத்துக்கே வந்தாச்சு ....
ஆரம்பிச்ச இடத்துல முடிக்கிறதால, இது கேயாஸ் தியரி இல்லை ..
பால்காரனுக்கும் மருத்துவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்
பால்காரன் ஏமாற்றி சம்பாதித்த பணம்
மருத்துவர் ஏமாற்றி சம்பாதித்த பணமாக மாரியதில்தான்
இருக்கு கேயாஸ் தியரி .......

இராம . செங்குட்டுவன்.

திங்கள், 6 ஜூலை, 2009

குஷ்பூ - கருணாநிதி சந்திப்பு- செய்தி

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த
இந்த சந்திப்பின் மூலம் இலங்கை தமிழர்களின் துயர் உடனடியாக துடைக்கப்படும் என்றும், காவிரியில் உடனடியாக 105 டி .எம் .சீ தண்ணீர் திறந்து விடவும் , ஒக்கேனேகள் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தடை இல்லை என்று கருநாடக அரசு உத்தரவு இடும் என்றும் , முல்லை பெரியார் அணை உயரத்ததை 148 அடியாக உயர்த்திட கேரளா அரசு சம்மதிக்கும் என்றும் ,பாலாற்றின் குறுக்கே அணை கட்டமாட்டோம் என்று ,ஆந்திர அரசு அறிவிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் .

ரெம்ப்ப முக்க்க்க்கியம் ......போங்கடாங்.......!

புதன், 1 ஜூலை, 2009

இன்று ஒரு குறுஞ்செய்தி( s.m.s)

___________________________


நீ என்ன அழகு தேவதையா ?

உன்னை பார்த்த உடன்

அனைத்தும் மறந்து விடுகிறதே ?

இப்படிக்கு தேர்வு கூடத்தில் உட்கார்ந்து

கேள்வித்தாளை பார்த்து

ஹைகூ எழுதுவோர் சங்கம்.

எங்களுக்கு எல்லா கல்லூரிகளிலும் கிளைகள் உண்டு...