வியாழன், 11 பிப்ரவரி, 2010

புதுவை அரசின் சிறந்த மாற்று திட்டம்



புதுவையில் கடந்த குடியரசு தினம் முதல் மாணவ- மாணவியர்கள் மட்டும் ஒரு ரூபாய் கட்டணத்தில் புதுவை முழவதும் பயணிக்க கூடிய தனிப்பட்ட பேருந்து வசதியினை புதுவை அரசு துவங்கியுள்ளது..இந்த திட்டம் உண்மையிலேயே வரவேற்க்ககூடிய ஒரு முன்னோடி மாற்று திட்டம் ஆகும்.. புத்தகமூட்டையைசுமந்து கொண்டு
மாணவர்கள் பொது பேருந்தில் பயணம் செய்வது அதிலும் கிராம புற மாணவர்கள் படும் அவதி சொல்லி மாளாது ..குழந்தைகளை படிக்க வைக்க வேண்டி கிராம புற மக்கள் நகரத்திற்கு இடம் பெயர்வதை இந்த நல்ல மாற்று திட்டம் தடுக்கும்..குழந்தைகளும் சிரமம் இன்றி பள்ளிக்கூடம் சென்று வரவும் படிப்பில் கவனம் செலுத்தவும் இந்த திட்டம் உதவும்...புதுவை ஒரு சிறிய மாநிலமாக இருப்பதால் இதை போன்ற மாற்று திட்டங்களை சோதனை முறையில் அமுல்படுத்தி அது மக்களிடையே வெற்றிபெற்றால் தொடர்ந்து செயல்படுத்தலாம். இதைபோல பிளாஸ்டிக் ஒழிப்பு , புதுவை நகரை தூய்மையாக வைத்திருக்க கடுமையான சட்டங்கள் ஆகியவற்றிலும் மாற்று திட்டங்களை கொண்டு வர முயற்சி எடுக்கவும், இந்த திட்டத்தை கொண்டு வந்தர்காகவும் புதுவை முதல்வருக்கு வாழ்த்துக்கள்..பேருந்து முதலாளிகளின் வலையில் விழுந்து விடாமல் தொடர்ந்து இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என புதுவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..

திங்கள், 8 பிப்ரவரி, 2010

பொங்கல் காசு-குறுங்கவிதை

கொடுத்ததெல்லாம்
திரும்ப பெறபட்டபோதும்
மீதம் இருந்தது
எல்லோராலும் எல்லோருக்கும்
வழங்கப்பட்ட
ஆசிர்வாதங்கள்..

சனி, 6 பிப்ரவரி, 2010

அஜித்தின் அசலான பேச்சு



மிக சமீபத்தில் நடந்த ஒருபாராட்டு விழாவில் நடிகர் அஜித் இப்படி பேசி இருக்கிறார் ."நடிகர்கள் நடிப்பு தொழிலை பார்க்கிறார்கள், அரசியல்வாதிகள் மக்கள் பணியை பார்கிறார்கள், இப்படி இருக்கும்போது எப்படி எங்களை போராட்டங்களில் கலந்துகொள்ளும்படியும், பாராட்டு விழாக்களில் கலந்துகொள்ளும்படியும் கட்டயாபடுத்தலாம் "என்று.

நடிகர் சங்கங்களும் , சினிமா தொழிலாளார்கள் சங்கங்களும் அதன் தலைவர்களும் தங்கள் காரியம் நடக்க வேண்டும் என்பதற்காகவும், காகா பிடிபதறகாகவும் மாதத்திற்கு ஒரு முறை பாராட்டு விழா என்று நடத்தி கொண்டு இருப்பார்கள் அதற்கெல்லாம் நடிகர்கள் கண்டிப்பாக வர வேண்டும் எழுதாத சட்டமாக இந்த காகா சங்கங்கள் நடிகர்களை கட்டயாபடுதுவது எதற்க்காக?மக்கள் பணிஆயிரம் இருக்க அதையெல்லாம் விட்டு விட்டு எல்லா அமைச்சர்களும் ஒரே இடத்தில அமர்ந்து கொண்டு நாட்டில் என்ன நடிக்கிறது என்று தெரியாமல் நான்கு ஐந்து மணி நேரம் நடிகைகளின் கவர்ச்சி நடனத்தை ஜொள்ளு விட்டு பார்த்து கொண்டு இருக்கும் இந்த கேடு கேட்ட ஜென்மங்களை என்னவென்று சொல்லுவது..பொதுவாக நடிகர்களுக்கு எல்லா கட்சியுளும் ரசிகர்கள் இருப்பார்கள் ..இதை போன்ற பாராட்டு விழாக்களில் கலந்து கொள்ளும்போது நடிகர்கள் ஒரு தரப்பு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கிறது ...பாராட்டு விழாவில் நடிகர்களின் புகழ்ச்சியினால் பாராட்டினால் என்ன நடந்து விடபோகிறது ?..இதனால் சாதாரண மக்களுக்கு என்ன நல்லது நடக்கபோகிறது ?வழுக்கை தலைக்கு மூன்று மணி நேரத்தில் சிகிச்சை என்று ஒரு விளம்பரம் பார்த்தேன் ... அனால் என்ன சிகிச்சை செய்தாலும் திருத்த முடியாத வழுக்கைகளை என்ன செய்வது ...