புதன், 6 மே, 2009

மாற்று சிந்தனைகள் - இராம.செங்குட்டுவன்




'அற்புதம்' 'பிரமாதம்' என்றார் அப்துல் கலாம்.இந்த வார்த்தைகளை கலாம் அடிக்கடி சொல்லகூடியவர்தான் ஆனால் சொன்ன இடமும் ,நேரமும் தவறாக பட்டது பக்கத்திலிருந்த சக விஞ்ஞானிக்கு ,


இடம் :- ஸ்ரீகரிகோட்டா


நேரம் :- பீ. எஸ் .எல்.வீ ராக்கெட்ஏவப்பட்டு சில மணித்துளிகளில் கடலில் விழுந்த நேரம்


ஆனால் 'அற்புதம்' 'பிரமாதம்' என்று அப்துல் கலாம் அப்போது சொன்னதற்கான அர்த்தத்தை அந்த சக விஞ்ஞானி மற்றொரு இடத்தில் அதே வார்த்தைகளை அவரே மீண்டும் சொன்னபோதுதான் புரிந்து கொண்டார் .எப்படி?


இடம் :- ஒரிஸ்ஸா ஏவுகணைத்தளம்
நேரம் :- அக்னி ஏவுகனை வெற்றிகரமாக விண்ணில் பரந்த நேரம்.


அப்துல் கலாம் அவர்களுக்கு ஏற்பட்ட மாற்று சிந்தனைதான் முதலில் ஏற்பட்ட தோல்வியை இரண்டாவது வெற்றியாக மாற்றியது. எப்படி? பீ.எஸ்.எல் .வி ராக்கெட் ஏவப்பட்டு இரண்டாயிரம் கிலோ மீட்டர் மேலே சென்று தன வெடித்து சிதறியது கடலில் விழுந்தது..அப்துல் கலாம் அற்புதம்,பிரமாதம் என்று சொன்னதற்கான காரணம், ஏன் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட்டிலைட்டுக்கு பதிலாக வெடி பொருட்களை பயன்படுத்தி இரண்டாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்க கூடிய ஏவுகனை தயாரித்தால் என்ன? என்று அவருக்கு முதலில் தோல்வியில் தோன்றிய மாற்று சிந்தனைதான் அக்னி ஏவுகனை இன்று நமது நாட்டின் ராணுவத்தின் வெற்றிக்கு பலமாக இருக்கிறது..அதனால் நண்பர்களே மாற்று சிந்தனைகளை உருவாக்குங்கள்..வெற்றிக்கான கதவு திறந்தே இருக்கும்...








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக