பாதிக்கு பாதி தண்ணி கலந்து
பால் வித்த காச கொண்டு
பழம் வாங்கலாம்னு பால்காரன்
பழகடைக்கு போனானாம் ..
மெழுகால மெருகேத்தி
பவுடரால பழுக்கவச்ச பழத்த
பால்காரனுக்கு வித்த பழகடைக்காரன்
மளிகை சாமான் வாங்கலாம்னு
மளிகை கடைக்கு போனானாம் .....
கடுகிலேர்ந்து பருப்பு வரைக்கும்
கலப்படம் பண்ண மளிகை சாமான
பழகடக்காரனுக்கு வித்த மளிகை கடக்காரன்
சாப்பிடலாம்னு ஓட்டலுக்கு போனானாம் ..
மாட்டு கறிய கோழி கறின்னு சொல்லி
மளிகை கடைக்காரனுக்கு வித்த ஓட்டல்காரன்
ஒடம்பு சரிஇல்லேன்னு
மருத்துவரு கிட்டே போனானாம் ...
ஒன்னு இல்லாத ஓட்டல் காரன் ஒடம்புக்கு
எல்லாம் சோதனையும் எழுதி கொடுத்து
ஏமாத்தி வைத்தியம் பார்த்த மருத்துவரு
சாமி கும்பிடனம்னு கோயிலுக்கு போனானாம்...
வரிசையில நிக்கற ஜனங்கள ஒதுக்கி
நேரா கருவறைக்கே கூட்டி சென்று
மருத்துவரு கழுத்துல மாலய போட்டு
தட்டு நிறைய காச பார்த்த ஐயரு
தயிரு வாங்கனும்னு
பால்காரன்கிட்டே போனானாம் ..
பாதிக்கு பாதி தண்ணி கலந்த பால் வித்த........
இருங்க ஆரம்பிச்ச இடத்துக்கே வந்தாச்சு ....
ஆரம்பிச்ச இடத்துல முடிக்கிறதால, இது கேயாஸ் தியரி இல்லை ..
பால்காரனுக்கும் மருத்துவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்
பால்காரன் ஏமாற்றி சம்பாதித்த பணம்
மருத்துவர் ஏமாற்றி சம்பாதித்த பணமாக மாரியதில்தான்
இருக்கு கேயாஸ் தியரி .......
இராம . செங்குட்டுவன்.
செவ்வாய், 7 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக